proporta education foundation

You are about to scroll down to view few very poor families with a gem of a Kid who deserves all the chances to come up in life and that’s where Proporta Education Foundation will play its little role in supporting them.


Rukshan Ahmed



Premakanth


Piyumi Buddika


Sumudu Lakshan



ரொசான் சம்பத் மாரசிங்ஹ

சிறிய கடை ஒன்று கூட இல்லாத காட்டுப் பகுதி ஒன்றில் புத்திக் கூர்மையான இவர் வசித்துவருகின்றார். பாடசாலை செல்வதற்காக 34 கிலோமீற்றர்களை அன்றாடம் அவர் நடந்துசெல்கின்றார்.

காட்டு யானைகள் சுதந்திரமாக நடமாடும் பகுதி ஒன்றில் அவரின் வீடு அமைந்துள்ளது. குடும்பத்தின் ஒரேயொரு வறுமானமீட்டும் நபரான அவரின் தந்தை 750 ரூபா (கிட்டத்தட்ட 4.50 பவூன்கள்) மாதாந்த வருமானத்துடன் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தை நடாத்திவருகின்றார். மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் இப்பிரதேசத்தில் காணப்படவில்லை. கல்வி கற்பதற்காக சிறுவர்கள் மிகவூம் கஷ்டப்படுகின்றார்கள்.

தனது வாழ்வின் கடினத்தன்மைக்கு மேலாகஇ அவரின் பாடசாலையில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதியவர்களுள் நான்காம் இடத்தை ரொசான் பெற்றுக்கொண்டுள்ளார்.


சசிகலா விமுக்தி சிசாநாயக


இவருக்கு ஐந்து சகோதர சகோதரிகள் காணப்படுகின்றனர். படத்தில் காண்பிக்கப்பட்டது போல களிமண் மற்றும் தென்னை ஓலையினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட வீடொன்றில் இவர்கள் வசிக்கின்றார்கள்.

அவரின் தந்தைஇ ஒரேயொரு வருமானமீட்டுபவர் என்றவகையில்இ மாதம் ஒன்றிற்கு 2500 ரூபாவை (கிட்டத்தட்ட 15 பவூன்கள்) சம்பாதிக்கின்றார். பிரதான வீதியில் இருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் அவரின் வீடு அமைந்திருப்பதோடுஇ வாழ்வூக்கான அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்வதில் குடும்பம் மிகவூம் கடினமான நிலையை எதிர்நோக்குகின்றது.


தேசானி அப்சரா அபேரத்ன



வலது கையில் இரண்டு விரல்களைக் கொண்டு பயிரிட்டுஇ தனது அறுவடைகளை விற்பதன் மூலம் மாதாந்தம் பெற்றுக்கொள்ளும் 2இ750 ரூபா (கிட்டத்தட்ட 16 பவூன்கள்) வறுமானத்தில் இருந்து தேசானி அப்சரா அபேரத்னவின் தந்தை அவரின் மகளுக்கு கல்விய+ட்டுகின்றார்.

மகள் கல்வியில் சிறப்பாகச் செயற்படுவதோடுஇ 2008 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுள் மூன்றாம் இடத்தை அவர் பெற்றுக்கொண்டார். 2009 இல் பெப் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை அவர் பெற்றுள்ளார். 2009 இல் அவரின் வடிவமைப்பு புரபோர்டாவின் ‘கிரிஸ்மஸ’ அட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டது. கீழ்வரும் படம் அவரின் ஓவியத்தை காண்பிக்கின்றது.


தரிந்து லக்சான் விதுரங்க



தரிந்து லக்சான் விதுரங்கவூம்; சிறுவயதாக இருக்கும் போதேஇ அவரும் அவரின் தாயூம் அவரின் தந்தையினால் கைவிடப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து அவரின் தாய் மனநோய்க்கு உட்பட்டார். இதனால் தரிந்து அதிக மன அழுத்தங்களுக்கு உள்ளானார். என்றாலும்இ தொடர்ந்தும் பாடசாலையில் தவணைப் பரீட்சைகளில் முதாலம் இடத்தை அவர் பெற்றுவந்தார். அவர் கலையிலும் சிறந்து விளங்குகின்றார்.

2009 இல் ‘பெப்’ கிரிஸ்மஸ் சித்திரப் போட்டிக்காக அவர் சமர்ப்பித்த ஓவியம் பின்வரும் படத்தில் காண்பிக்கப்படுகின்றது. அதில் அவர் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார். அவரினதும் அவரின் தாயினதும் படமும் அவரின் பாதி கட்டப்பட்ட வீட்டுக்கருகில் வைத்துக் காண்பிக்கப்பட்டுள்ளது.